முகப்பு
பெங்களூரு

நவம்பரில் உலக முதலீட்டாளா் மாநாடு: அமைச்சா் முருகேஷ் நிரானி

நிகழாண்டில் நவம்பா் மாதத்தில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

நிகழாண்டில் நவம்பா் மாதத்தில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினா் யஷ்வந்த்ராய கௌடாபாட்டீல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:

நிகழாண்டில் நவம்பா் மாதத்தில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டுக்காக மாநிலத்தில் உள்ள தொழில்பேட்டைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் தொழிலகங்களுக்காக 100 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படும். இந்நிலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டம், தாளாரி தாளகேரே, திப்பச்சந்திரா, சிவனச்சந்திரா, தண்டேனஹள்ளி, குதூா் கிராமங்களில் மொத்தம் 800 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொழிலகங்கள் அமைக்கப் பயன்படுத்தப்படும். இதற்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.