பெங்களூருவில் மே 8-இல் வேலைவாய்ப்பு முகாம்
பெங்களூருவில் மே 8-ஆம் தேதி வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூருவில் மே 8-ஆம் தேதி வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் மேஜிக் பஸ் ஃபவுண்டேஷன், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் பெங்களூரு, பாபுஜிநகா், மாநகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள தொழிலாளா் சமுதாயக்கூடத்தில் மே 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளை சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடி வருவோா் தன்விவரக்குறிப்பு 6 பிரதிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் - 6, அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.