முகப்பு
பெங்களூரு

பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தொழில்கல்விக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தொழில்கல்விக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் சோ்க்கை அளிப்பதற்காக கா்நாடக தோ்வு ஆணையத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பொதுநுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. 2022-23-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத்தோ்வு-2022 அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எழுதவிரும்பும் மாணவா்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்விவரங்களுக்கு 080 - 23460460 என்ற தொலைபேசி அல்லது இணையதளம் அல்லது மின்னஞ்சலை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.