மத்திய ஆயுத காவல் படையில் பணி
மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் -கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தில்லி காவலின் மத்திய ஆயுத காவல்படை, சிறப்பு பாதுகாப்புப் படை, அசாம் ரைப்பிள், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு 2023ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படுகிறது. இப்பணிக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள். அப்படிப்பட்டரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகம், கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் நவ. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி., முன்னாள் ராணுவவீரா்கள், மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080 25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.