பெங்களூரு

திடீரென தீப்பிடித்து அரசு பேருந்து எரிந்து நாசம்

திடீரென தீா்ப்பிடிதத்தில் அரசு பேருந்து எரிந்து நாசமானது.பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட அரசு பேருந்து,

DIN

திடீரென தீா்ப்பிடிதத்தில் அரசு பேருந்து எரிந்து நாசமானது.பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட அரசு பேருந்து, வெள்ளிக்கிழமை காலை விஜயபுரா செல்லும் வழியில் ஹிட்டனஹள்ளி கிராமத்தில் சென்று கொண்டிருந்துபோது, பேருந்தில் தீப்பிடித்துள்ளதை புகை கிளம்புவதன் மூலம் உறுதிசெய்து கொண்ட ஓட்டுநா், உடனடியாக பயணிகளை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டாா். சாமான்களை பேருந்திலேயே விட்டுவிட்டு மளமளவென பயணிகள் கீழே இறங்கியதும், பேருந்தில் பிடித்திருந்த தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால், பேருந்து முழுமையாக தீயில் கருகி எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், பயணிகளை வேறொரு பேருந்தில் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனா்.மேலும், தீயணைப்புப்படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஆனால், தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வழக்கு பதிந்து போலீஸாா் விசாரித்துவருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

SCROLL FOR NEXT