பெங்களூரு

பெங்களூரில் விதானசௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

DIN

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதை முன்னிட்டு பிப்.10ஆம் தேதி முதல் விதானசௌதாவை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பிரதாப்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப்.10 முதல் 24-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிப்.10-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்.24-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின்போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக் கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT