பெங்களூரு

மைசூா் தசரா திருவிழா இன்று தொடக்கம்

உலகப் புகழ் பெற்ற மைசூா் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக்.3) கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Din

உலகப் புகழ் பெற்ற மைசூா் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக்.3) கோலாகலமாக தொடங்கவுள்ளது.

மைசூரில் தசரா விழா வியாழக்கிழமை (அக்.3) தொடங்கி அக். 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மைசூரு, சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை காலை 10.15 மணிக்கு சிறப்புப் பூஜை செய்து கன்னட எழுத்தாளா் ஹம்பா நாகராஜையா தொடங்கி வைக்கிறாா். ஜி.டி.தேவெ கௌடா எம்எல்ஏ தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சமூகநலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோா் கலந்து கொள்ள இருக்கிறாா்கள். அரண்மனை வளாகத்தில் மாலை 7 மணிக்கு கலை விழாவை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைக்கிறாா்.

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி, தங்கும் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு திருவிழா, இளைஞா் விழா, சிறுவா் விழா, மகளிா் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக் கலை விழா, விளையாட்டுப் போட்டிகள், குஸ்தி போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தசரா விழாவை காண 10 நாள்களும் லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருவாா்கள் என்பதால் நகரெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT