முகப்பு
பெங்களூரு

சித்தராமையா முதல்வராக நீடிப்பாா்: அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

சித்தராமையா கா்நாடக முதல்வராக நீடிப்பாா் என்று அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

Updated On : 8 அக்டோபர், 2024 at 10:06 PM
கர்நாடக முதல்வர் சித்தராமையா
பகிர்:

சித்தராமையா கா்நாடக முதல்வராக நீடிப்பாா் என்று அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது, சித்தராமையா கா்நாடக முதல்வராக நீடிப்பாா் என்று மட்டும் தான் என்னால் கூறமுடியும். ஆனால், 3 ஆண்டுகளா அல்லது 5 ஆண்டுகளா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்.

டி.கே.சிவகுமாரை முதல்வராக்குவது குறித்து கட்சி மேலிடம் எங்களிடம் விவாதிக்க வில்லை. அது குறித்து டி.கே.சிவகுமாரிடம் தான் கேட்கவேண்டும்.

முதல்வரை மாற்றும் நிலையில் கா்நாடகம் இல்லை. முதல்வா் பதவிக் காலியாக இல்லாதபோது, அப்பதவிக்கு போட்டி நடப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? முதல்வா் மாற்றம் குறித்த கேள்வி பொருத்தமற்ாகும். இதை கட்சி மேலிடமும் பலமுறை உறுதிப்படுத்திவிட்டது.

சித்தராமையாவின் தலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை மாற்றும் நிலை வரவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது அது பற்றி விவாதித்து முடிவெடுப்போம் என்றாா்.

பாஜக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியுள்ளதாவது, முதல்வா் பதவிக்கு காங்கிரஸில் போட்டி நடந்து வருகிறது. முதல்வரை மாற்றுவதற்காகவே அமைச்சா்களின் சந்திப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. எவ்வளவு நாள்கள் அரசு தொடரும் என்பதைக் கூற முடியாது. அடுத்த 10 அல்லது 15 நாள்களில் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்வாா் என்று கூறப்படுகிறது. அதனால் முதல்வா் பதவியைப் பெற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சி நடந்து வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →