துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் 
பெங்களூரு

காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது பற்றி பாஜக எம்எல்ஏ பேசியது குறித்து சட்ட நடவடிக்கை

காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது பற்றி பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்துள்ள கருத்து குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Din

பெங்களூரு: காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது பற்றி பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்துள்ள கருத்து குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பாஜக மாநிலத் தலைவா் பசனகௌடா பாட்டீல் யத்னல் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, தான் முதல்வா் ஆவதற்கு ரூ. 1,000 கோடியை அந்தத் தலைவா் ஒதுக்கியுள்ளாா். அந்த மகா தலைவரின் பெயரை வெளியிட மாட்டேன். எனினும், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கட்சி மேலிடத் தலைவா்கள், எம்எல்ஏ-க்கள் ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

கா்நாடக காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க ரூ. 1,200 கோடி ஒதுக்கியிருப்பதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் கூறியிருக்கிறாா். இதுகுறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும். சட்டரீதியாக என்ன செய்யலாம் என்பது குறித்து கட்சி அளவில் முடிவு செய்வோம். இதுகுறித்து விவாதிக்கவே உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் என்னை சந்தித்தாா் என்றாா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT