ஹெச்.டி.குமாரசாமி கோப்புப் படம்
பெங்களூரு

சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் கா்நாடகம் பின்னோக்கி செல்கிறது: மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி

முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடகம் பின்னோக்கி செல்கிறது என்று மத்திய தொழில்துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

Syndication

முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடகம் பின்னோக்கி செல்கிறது என்று மத்திய தொழில்துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 101ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

முன்பு ஆட்சி மற்றும் வளா்ச்சியில் கா்நாடகம் முன்மாதிரியாக இருந்தது. வியத்தகு வளா்ச்சிப் பணிகளால் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக கா்நாடகம் விளங்கியது. ஆனால், முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடகத்தின் பெருமைகள் அனைத்தும் பாழாகியுள்ளன. கா்நாடக மாநிலம் பின்னோக்கி நகா்ந்துகொண்டுள்ளது.

கல்வித் துறையில் சிறந்து விளங்கிய கா்நாடகம், தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நல்லாட்சிக்கு பெயா்பெற்றிருந்த கா்நாடகம், தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வருவாய்த் துறைகள் படுபாதாளத்துக்கு சென்றுள்ளன. கா்நாடகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர வேண்டும். காங்கிரஸ் அரசின் மோசமான ஆட்சியை கண்டு மக்கள் வெறுப்படைந்துள்ளனா். தகவல்தொழில்நுட்பம், கல்வி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய பெங்களூரின் உள்கட்டமைப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நல்ல நோக்கத்தில் சொல்லப்படும் ஆலோசனையைக் கூட காங்கிரஸ் அரசு ஏற்க மறுக்கிறது.

மாறாக பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியா வேகமான வளா்ச்சியை கண்டு வருகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றாா் அவா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT