பெங்களூரு

கா்நாடகத்தில் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் ஆய்வு: சித்தராமையா

கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Syndication

கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரேயில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பேருந்துகள் மற்றும் லாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகள், லாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வோம். சித்ரதுா்கா மாவட்டத்தில் நடந்த விபத்தில் பேருந்து மீது லாரி மோதியது. இதில் 7 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநா்தான் பெரும் தவறிழைத்துள்ளாா். சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து மீது லாரி மோதியுள்ளது.

ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியது குறித்து பாஜக வாய்திறக்காது. ஆனால், கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஏதாவது கட்டணத்தை உயா்த்தினால் மட்டும் பாஜக வாய்திறக்கும். காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுதில்லி செல்கிறேன். நான் அடிக்கடி தில்லி செல்லவில்லை என்றாா் அவா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT