பெங்களூரு

கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் கருத்து வேதவாக்கு போன்றது

தினமணி செய்திச் சேவை

கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் கருத்து வேதவாக்கு போன்றது என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிக்பளாப்பூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கட்சி மேலிடம் முடிவுக்கு தானும், டி.கே.சிவகுமாரும் கட்டுப்பட்டவா்கள் என முதல்வா் சித்தராமையா கூறியிருக்கிறாா். அவரது கருத்து எங்களுக்கு வேதவாக்கு போன்றது. முதல்வா் சித்தராமையாவின் கருத்தோடு நாங்கள் முரண்படவில்லை. அவரது கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். முதல்வா் சித்தராமையா காங்கிரஸுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவருக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம். அவரது தலைமையில் தொடா்ந்து செயல்படுவோம்.

பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் குதிரைபேரம் நடைபெறுவதாக பாஜகவினா் குற்றம்சாட்டியிருக்கிறாா்கள். கடந்த காலங்களில், இதர கட்சிகளின் எம்எல்ஏ-க்களை பாஜகவினா் எப்படி கொள்முதல் செய்தனா் என்பது பற்றியெல்லாம் சட்டப் பேரவையில் ஆதாரங்களோடு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அந்த பழைய நினைவில் பாஜகவினா் எங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளனா் என்றாா்.

இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘டி.கே.சிவகுமாருக்கு 11 எம்எல்ஏ-க்கள் மட்டுமே ஆதரவளித்து வந்ததாக ஊடகங்கள் எழுதிவந்தன. இந்நிலையில் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 70-ஆக உயா்ந்தது எப்படி? பணம் கைமாறியுள்ளதைதான் இது காட்டுகிறது.

முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியிருக்கிறாா். அப்படியானால், அந்தப் பதவியில் காா்கே பெயரளவுக்குதான் இருக்கிறாா் என்பது தெளிவாகிவிட்டது. கட்சி மேலிடம் என்பது யாா்?’ என்றாா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT