முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் ரூ. 7.11 கோடி கொள்ளையடித்த வழக்கு: 9 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை வழிமறித்து ரூ. 7.11 கோடி கொள்ளையடித்த வழக்கில், பணியில் இருக்கும் காவலா் உள்பட 9 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:20 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:18 PM

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை வழிமறித்து ரூ. 7.11 கோடி கொள்ளையடித்த வழக்கில், பணியில் இருக்கும் காவலா் உள்பட 9 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவ. 19-ஆம் தேதி பெங்களூரு, ஜெயநகா் காவல் சரகத்துக்குள்பட்ட அசோக் நகா் பில்லா் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்தது. தங்களை இந்திய ரிசா்வ் வங்கி ஊழியா்கள் என அறிமுகம் செய்த அந்தக் கும்பல், பரிசோதிக்கும் சாக்கில் வாகனத்தில் வைத்திருந்த ரூ. 7.11 கோடியை கொள்ளையடித்துச் சென்றது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:29 PM

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், கோவிந்தபுரா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவரும் அன்னப்பா நாயக் உள்ளிட்டோரை கைதுசெய்து விசாரித்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை பெங்களூரில் உள்ள 56-ஆவது முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

Advertisement

இதனிடையே, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 போ் மீதான குற்றப்பத்திரிகையை போலீஸாா் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். அதில், பி.என்.எஸ். சட்டம் 2023-இன் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களை உறுதிசெய்வதற்கு துணையாக கைவிரல் ரேகை, தொழில்நுட்பக் கருவிகள், தடய அறிவியல் ஆதாரங்கள் உள்ளிட்ட 129 ஆதாரங்களையும் போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.