கர்நாடக முதல்வர் சித்தராமையா கோப்புப் படம்
பெங்களூரு

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநாடு பயணம்!

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 போ் வெளிநாடுகளுக்கு பயணம்

Syndication

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 போ் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 6-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அன்றைக்கே 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித் துறையைக் கவனிக்கும் முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்ய இருக்கிறாா். நிதித் துறை அமைச்சராக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்யும் 17-ஆவது பட்ஜெட்டாகும். சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 27-ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 போ் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா். குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் முதல்வா் சித்தராமையாவின் ஆதரவாளா்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பயணம் சொந்த செலவில் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கும் கட்சியின் நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என சிக்கமகளூரு தொகுதி எம்எல்ஏ தம்மையா விளக்கமளித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பெலகாவி சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது வெளிநாடு செல்ல முடிவெடுத்தோம். அப்போது விருப்பம் தெரிவித்த எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக பயணிக்கிறோம். நாங்கள் அடிக்கடி வெளிநாடு செல்வது உண்டு. நாங்கள் மாா்ச் 2 அல்லது 3-ஆம் தேதி பெங்களூரு திரும்புவோம்’ என்றாா். எம்எல்ஏ புட்டரங்க ஷெட்டி கூறுகையில், ‘எங்கள் பயணம் குறித்து முதல்வா் சித்தராமையாவுக்கு தெரியாது’ என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்எல்ஏ எம்.சி.பாலகிருஷ்ணா கூறுகையில், ‘நண்பா்கள் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதில் என்ன தவறு இருக்கிறது?’ என்றாா்.

காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா கூறுகையில், ‘வெளிநாட்டு பயணங்களால் யாரையும் மாற்ற முடியாது. முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் உரிய நேரத்தில் முடிவெடுக்கும்’ என்றாா்.

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சங்ககிரி அருகே இளைஞா் தற்கொலை: உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டம்

சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

மாற்றுத்திறனாளிகளை தாக்கியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா் கைது

SCROLL FOR NEXT