சென்னை

காரைக்காலில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

காரைக்கால், பிப். 14: காரைக்காலில் சமூக விரோதச் செயல்கள் வேரூன்ற இடமளிக்காமல்   அதைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. ÷புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்களை உள்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், பிப். 14: காரைக்காலில் சமூக விரோதச் செயல்கள் வேரூன்ற இடமளிக்காமல்   அதைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

÷புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. முற்றிலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது இயங்குகிறது. நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட எந்தத் தேவையானாலும் இந்த அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்நிலையில், இந்த யூனியன் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலும் சமூக விரோதச் செயல்கள் வேரூன்றாமல் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உண்டு. 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட காரைக்காலில், வெறும் 300 காவலர்களே உள்ளனர். காரைக்கால் காவல் துறைக்கென நவீன வசதிகள் எதுவுமே இல்லை.

செயலிழந்த மாநில உளவுப் பிரிவு: காரைக்கால் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகப் பகுதியிலேயே மாநில உளவுப் பிரிவான "ஸ்பெஷல் பிராஞ்ச்' உள்ளது. இது தலைமைக் காவலர்களை மட்டுமே கொண்டு இயங்குவதால் செயலற்று  இருப்பதாகப் புகார் கூறுகின்றனர்.

÷காரைக்காலில் தனியார் சார்பில் கப்பல் துறைமுகம் செயல்படத் தொடங்கி, மாதத்துக்கு 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வந்து செல்கின்றன. ஆனால், இதுவரை அங்கு குடியேற்றப் பிரிவு தொடங்கப்படவில்லை. கப்பலில் இருந்து இறங்கிய ஓர் ஊழியர், அனுமதியின்றி ஊருக்குள் புகுந்தது பிறகு கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.

தீவிரவாதச்  சம்பவங்களுக்கான அறிகுறி: காரைக்கால் பகுதி நிரவி அருகே 9-ம் தேதி கேட்பாரற்றுக் கிடந்த 25-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர் குச்சிகள், வயர்களை பிரித்தபோது வெடித்து, ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 2004-ல் கருக்கண்குடி சாலையில் ஒரு வாய்க்கால் மதகுக்கு கீழே ஒரு துப்பாக்கியும், நரேந்திரமோடியைக் கண்டித்து எழுதப்பட்ட கடிதமும் கைப்பற்றப்பட்டது.

÷கடந்த 2003-ல் தருமபுரம் பகுதியில் ஒரு வீட்டில் விநோதமான கான்கீரிட் பந்துகள் 6, அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில் காரைக்கால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக காவல் துறையினருக்கு மர்மக் கடிதங்கள் வந்தன.

÷1995-ல் தீவிரவாதி இமாம் அலி காரைக்காலில் தங்கியிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது. தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு முன் இங்கு தீவிரவாதிகள் பயிற்சி மையம் செயல்படுவதாக செய்தி வெளியானது. ஆக, இதுபோன்ற சமூக விரோதச் சம்பவங்கள் காரைக்கால் பகுதியில் நிகழ்வதை, மாநில போலீஸôரால் மறுக்க முடியாது.

  வலுவற்ற கடலோரக் காவல் பிரிவு: காரைக்காலில் கடலோரக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தாலும், பயிற்சி பெற்ற காவலர்கள் அங்கு இல்லை. நவீன வசதிகளும் இல்லை. நடுக்கடலில் நிற்கும் கப்பல்களில், மீன்பிடிப் படகுகளில் சந்தேகத்தின் பேரில் ஏறி சோதனை செய்ய வசதியுள்ள படகு இல்லை. ரோந்துக்குப் போதுமான காவலர்கள் அங்கு நியமிக்கப்படவில்லை. மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, காரைக்கால் பகுதி கடலோரக் காவல் நிலையத்தின் செயல்பாடு முடுக்கப்பட்டது.

÷ஆனால், அது பெயரளவுக்கு இருப்பதற்கு, மேற்கூறிய குறைபாடுகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

  கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவரைக் கண்டறிய போலீஸôர் எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, வழக்கைக் கைவிடும் போக்கை போலீஸôர் கையாள்கின்றனர். இதனால், பல வழக்குகளுக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. இது தவறு செய்வோருக்குச் சாதகமாக உள்ளது. அரசியல் தலையீடு இல்லாமை, துணிச்சல் மிக்கோர் காவல் துறையில் அதிகாரிகளாக இருத்தல் உள்ளிட்டவை அவசியம் என்கின்றனர் காரைக்கால் பகுதி மக்கள்.

÷இவற்றையெல்லாம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உண்டு. எனவே, காரைக்கால் பகுதி பாதுகாப்பில் மத்திய உள்துறை அமைச்சர்  அக்கறைக் கொண்டு, நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு உளவுப் பிரிவுகளை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும்.

  விசாரணைகளை இடையிலேயே நிறுத்திக் கொள்ளாத அளவில் போலீஸôருக்கு முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும். காவல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காரைக்கால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகவும், திருநள்ளாறு பக்தர்களை ஈர்க்கும் தலமாகவும் விளங்குவதால், பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT