முகப்பு
சென்னை

முப்பரிமாண அச்சாக்க முறையில் முதன் முறையாக கட்டடம் உருவாக்கம்: எல்&டி

ல்&டி நிறுவனம் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3டி பிரிண்டட்) முதன்முறையாக தரைத் தளம் மற்றும் ஒரு மேல் தளம் (ஜி+1) கொண்ட கட்டிடத்தை உருவாக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சென்னை: எல்&டி நிறுவனம் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3டி பிரிண்டட்) முதன்முறையாக தரைத் தளம் மற்றும் ஒரு மேல் தளம் (ஜி+1) கொண்ட கட்டிடத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

முப்பரிமாண அச்சாக்கம் என்பது கணினி கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமான வரைபட அடிப்படையில் முப்பரிமாணத்தில் காங்கிரீட் கலவையை ஒரு அடுக்கின் மேல் மற்றொரு அடுக்காக கட்டமைக்கும் ஒரு நவீன தொழில்நுட்ப முறையாகும்.

எல் & டி நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் முதன் முறையாக 700 சதுர அடி பரப்பளவிலான தரை தளம் மற்றும் ஒரு மேல் தளம் (கிரவுண்ட் பிளஸ் ஒன்-ஜி+1) கொண்ட கட்டடத்தை 106 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்குவதற்கான 6 கோடி வீடுகளை கட்டமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எல்&டி-யின் முப்பரிமாண அச்சாக்க நவீன கட்டுமான முறை வெகுஜன மக்களுக்கு விரைந்து வீட்டு வசதி வழங்க மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என எல்&டி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →