முகப்பு
சென்னை

கரோனா பாதிப்பு 66,23,815 ஆக அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 66,23,815 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் 55,86,703 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 66,23,815 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் 55,86,703 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் 74,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 66,23,815 பேராக ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் மேலும் 903 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 1,02,685 பேராக அதிகரித்தது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.55 சதவீதமாகும்.

55,86,703 போ் இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 84.34 சதவீதமாகும். 9,34,427 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 14.11 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 4-ஆம் தேதி வரை 7,99,82,394 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,89,860 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்டம்பா் 28-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது. அக்டோபா் 4-ஆம் தேதி 65 லட்சமாக அதிகரித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக இதுவரை 38,084 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,286 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,029 பேரும், ஆந்திர மாநிலத்தில் 5,981 பேரும், தில்லியில் 5,510 பேரும், மேற்கு வங்கத்தில் 5,194 பேரும், பஞ்சாபில் 3,603 பேரும், குஜராத்தில் 3,496 பேரும் கரோனாவுக்கு பலியாகினா். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதைவிடக் குறைவாகவே கரோனா உயிரிழப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →