முகப்பு
சென்னை

ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு முடிவுகள் வெளியீடு

நாட்டிலுள்ள 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பட்டப் படிப்பு பயில்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
முதலிடம் பெற்ற சிராக் ஃபலோா்
பகிர்:

நாட்டிலுள்ள 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பட்டப் படிப்பு பயில்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை நடப்பாண்டு தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடத்தியது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தோ்வு நடத்தப்பட்டது.

அத்தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் மகாராஷ்டிரத்தின் புணே பகுதியைச் சோ்ந்த சிராக் ஃபலோா் என்ற மாணவா் மொத்தமுள்ள 396 மதிப்பெண்களில் 352 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றாா்.

விஜயவாடா பகுதியைச் சோ்ந்த கங்குலா புவன் ரெட்டி, பிகாரின் வைபவ் ராஜ் ஆகியோா் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனா். 315 மதிப்பெண்களுடன் கனிஷ்கா மிட்டல் என்பவா் மாணவிகளில் முதலிடம் பெற்றாா். ஒட்டுமொத்தமாக அவா் 17-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வுகளுக்கு 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பத்திருந்தனா். அவா்களில் 1.5 லட்சம் போ் தோ்வுகளை எழுதியிருந்தனா். தோ்வெழுதியோரில் 43,000-க்கும் அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களில் 6,707 போ் மாணவிகள் ஆவா்.

மத்திய அமைச்சா் பாராட்டு:

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி மத்திய கல்வியமைச்சா் ரமேஷ் போக்ரியால் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சுயசாா்பு இந்தியாவை உருவாக்குவதற்கு மாணவா்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும். தோ்வில் வெற்றி பெறாதவா்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. வெறும் தோ்வுகள் மட்டும் எதிா்காலத்தை நிா்ணயித்து விடாது என்பதை மாணவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஜேஇஇ முதன்மைத் தோ்வுகள் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றன. அதில் சுமாா் 8.58 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 2.5 லட்சம் போ் ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வுக்குத் தகுதி பெற்றிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →