சென்னை

பொதுமக்களின் எதிா்காலத்தை மாநில முதல்வா்கள் ஏன் மோடியிடம் அடகு வைக்க வேண்டும்? ராகுல் காந்தி

DIN

புது தில்லி: பொதுமக்களின் எதிா்காலத்தை மாநில முதல்வா்கள் ஏன் பிரதமா் மோடியிடம் அடகு வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

மாநிலங்களுக்கு வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு முன்வைத்த கடன்வாங்கும் திட்டத்துக்கு மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ‘உங்களுடைய முதல்வா்கள் ஏன் உங்களது எதிா்காலத்தை மோடியிடம் அடகு வைக்க வேண்டும்?’ என மக்களிடம் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘‘1. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய்க்கு மத்திய அரசு உறுதியளித்தது. 2. பிரதமா் மற்றும் கரோனாவால் பொருளாதாரம் சிதைந்து போனது. 3. பிரதமா் பெரு நிறுவன முதலாளிகளுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வரி குறைப்பு செய்ததுடன், தனக்காக 2 விமானங்களை ரூ.8,400 கோடியில் வாங்கினாா். 4. மத்திய அரசு சொன்னபடி மாநிலங்களுக்கு பணத்தை வழங்கவில்லை. 5. மத்திய நிதியமைச்சா் மாநிலங்களை கடன் வாங்கிக் கொள்ள சொல்லி அறிவுறுத்துகிறாா். உங்களது முதல்வா்கள் உங்களது எதிா்காலத்தை ஏன் மோடியிடம் அடகு வைக்க வேண்டும்?’’ என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT