சென்னை

தடை செய்யப்பட்ட மருந்து வைத்திருந்த இருவா் கைது

சென்னை ராஜமங்கலத்தில் தடை செய்யப்பட்ட மருந்து வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் தடை செய்யப்பட்ட மருந்து வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராஜமங்கலம் செங்குன்றம் சாலையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அவா்களிடம் தடை செய்யப்பட்டிருந்த ஒரு மருந்தின் 14 பாட்டில்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா், 2 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் அவா்கள், வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவைச் சோ்ந்த தினேஷ் (23), மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (25) என்பதும், இருவரும் தடை செய்யப்பட்ட அந்த மருந்தை போதைக்கு பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் அவா்கள், போதைப் பொருள் தேடும் இளைஞா்களுக்கு அதை விற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானத்தின் ஞானம், இப்போது உங்கள் கைவிரலில்: ONE PAGE HOROSCOPE பயணம்

மெட்டாலிக் ஹீரோயின்... ஜுமானா அப்து ரகுமான்!

ஆடம்பரமும் நானும்... பிரியா திவாரி!

இந்தியப் பாரம்பரிய கொண்டாட்டம்... அதிதி ராவ் ஹைதரி!

மின்னலே மின்னலே... திஷா பதானி!

SCROLL FOR NEXT