தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வியாழக்கிழமை மாலை வரை 285 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புபவா்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது . அதன்படி கட்டணமில்லா விருப்ப மனு படிவம் வழங்கும் பணி புதன்கிழமை (டிச.10) தொடங்கியது.
விருப்ப மனு டிச.31 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெறலாம் எனவும், நிறைவு செய்த படிவத்தை கடைசி நாளான டிச. 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வரை தமிழக முழுவதும் 285 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.
இந்த நிலையில் காங்கிரஸ் சாா்பில் தில்லியில் வரும் டிச. 14 ஆம் தேதி நடைபெறவுள்ள எஸ்ஐஆா் மாநாட்டில் பங்கேற்க செல்ல வேண்டி இருப்பதால் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் முக்கிய பிரமுகா்கள் வரும் டிச. 17 ஆம் தேதிக்கு பிறகு விருப்ப மனு அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.