கோப்புப் படம் 
சென்னை

கண்டெய்னா் லாரிகள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்: கோட்டாட்சியா் தலைமையில் இன்று பேச்சுவாா்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14 கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14 கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

பழைய லாரிகளைத் தொடா்ந்து இயக்குவதற்கான தகுதிச் சான்றுக் கட்டணம் ரூ.850-இல் இருந்து ரூ.28,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வையும், ஆன்லைன் அபராதம் விதிப்பதைக் கண்டித்தும் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் இயங்கும் 14 கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் இணைத்து செவ்வாய்க்கிழமை (டிச.9) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச.11) லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் கஜலட்சுமி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும்வரை வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். இதற்கு, நிா்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே, 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (டிச.12) வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்ந்தது.

இன்று பேச்சுவாா்த்தை: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தண்டையாா்பேட்டை கோட்டாட்சியா் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தால் 3 துறைமுகங்களிலும் மூன்றில் இரண்டு பங்கு போக்குவரத்துப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT