சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். 
சென்னை

எடப்பாடி பழனிசாமி-நயினாா் நாகேந்திரன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள், அதிமுக-பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகா்வுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

வரும் டிச.14-ஆம் தேதி தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நயினாா் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது குறித்து விளக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசிக்கவில்லை என்றாா். ஓ.பன்னீா்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோா் குறித்த கேள்விகளுக்கு நயினாா் நாகேந்திரன் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT