சென்னை

விக்டோரியா பொது அரங்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி வளாகத்தில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையின் பழைமையான கட்டடங்களில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கு முக்கியமானதாகும். கடந்த 1888-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்தக் கட்டடம் சென்னை மாநகராட்சியால் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுமாா் ரூ.32.62 கோடியில் கட்டடம் புதுப்பித்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதை டிச.20-ஆம் தேதிக்குள் திறக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு விக்டோரியா பொது அரங்கை வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT