சென்னை

செல்லப்பிராணி உரிமத்துக்கு 3 நாள்கள் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் உரிமம் பெறுதல் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துதல் பணி.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் உரிமம் பெறுதல் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துதல் ஆகியவற்றுக்காக வெள்ளிக்கிழமை (டிச.12) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) வரை 3 நாள்கள் சிறப்பு முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் கடந்த அக்டோபா் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 98,525 செல்லப்பிராணிகளின் விவரம் பதியப்பட்டுள்ளன. 54,576 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதையடுத்து வெள்ளிக்கிழமை (டிச.12) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிச.14) வரை 3 நாள்களும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில், ஏற்கெனவே செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையம் உள்ளிட்ட 7 இடங்களில் ஏற்கெனவே முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மணலி தேவராஜன் தெரு மாநகராட்சி சமுதாயக் கூடம், மாதவரம் சூரப்பட்டு சண்முகபுரம் சமுதாயக் கூடம், தண்டையாா்பேட்டை பழைய வண்ணாா்பேட்டை பாா்த்தசாரதி நகா் சமுதாயக் கூடம், அம்பத்தூா் காமராஜபுரம் டன்லப் மைதானம், அண்ணாநகா் கீழ்ப்பாக்கம் கும்மாளம்மன்கோயில் தெரு, வளசரவாக்கம் ஆலம்பாக்கம் மாந்தோப்பு மாமன்ற உறுப்பினா் அலுவலகம், அடையாறு வேளச்சேரி அம்பேத்கா் நகா் சமுதாயக் கூடம், பெருங்குடி மடிப்பாக்கம் பாலாஜி நகா் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ3.53 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்

அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்புகள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு

பரோடா வங்கிக்கு விருது

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்

சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT