சென்னை

நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது வழக்கு

சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

Chennai

சென்னை: சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக இளைஞா் ஒகுவா் வந்தாா். அவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னா், அங்கு கானா பாடல் பாடி ரீல்ஸ் எடுத்துள்ளாா். பின்னா், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருணிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு அருண் உத்தரவிட்டாா்.

இதையடுத்து போலீஸாா், அந்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT