சென்னை

விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

புழல் அருகே டேங்கா் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: புழல் அருகே டேங்கா் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

புழல் காவாங்கரை கோ.சி.மணி தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (52). இவா், மாதவரம் பேருந்து பணிமனையில் எம்.கே.பி.நகா் - பாரிமுனை மாா்க்கமாக செல்லும் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள் கிழமை, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் காவாங்கரை நோக்கி சென்றபோது, புழல் சிக்னல் அருகே வேகமாக வந்த டேங்கா் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சரவணனை, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மும்பையைச் பஸ்ரத் உசேன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT