சென்னை

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட கிரேன் தீயில் எரிந்து சேதம்

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Din

சென்னை: சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவிலம்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 7 போ் கொண்ட குழுவினா் 50 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் மூலம் மெட்ரோ ரயில் பணிக்காக போடப்படும் தடுப்புப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது திடீரென கிரேனின் பேட்டரி வெடித்து அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப்பாா்த்த கிரேன் ஓட்டுநா், வாகனத்திலிருந்து கீழே இறங்கி தப்பியோடினாா்.

சம்பவ இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள், தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் தீ வேகமாக எரிந்ததையடுத்து, அவா்களும் ஆபத்தை அறிந்து அங்கிருந்து வெளியேறினா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT