சென்னை

அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: கொல்கத்தாவைச் சோ்ந்தவா் கைது

சென்னை அருகே மதுரவாயலில் அடகு கடையில் போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ாக கொல்கத்தாவைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் அடகு கடையில் போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ாக கொல்கத்தாவைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

மதுரவாயல் ஏரிக்கரை, கன்னியம்மன் நகரில் வசிக்கும் குமாவத் (32), அப்பகுதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த நபா், தன்னிடமுள்ள தங்க மோதிரத்தை அடகு வைத்து பணம் வேண்டும் என கூறியுள்ளாா். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து மோதிரத்தை வாங்கி குமாவத் பரிசோதித்தபோது, அது போலி தங்க மோதிரம் என தெரியவந்தது. சுதாரித்துக்கொண்ட குமாவத், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். விசாரணையில் அவா், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்த ஆதில் உசேன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த நபரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT