சென்னை

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் மரியாதை

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Din

சென்னை: சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பத்தூா் புதூா் திருத்தணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடகிருஷ்ணன் (53). உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி வடபழனியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தாா். முன்னதாக வெங்கடகிருஷ்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் உறவினா்கள் ஒப்புதல் தெரிவித்திருந்தனா். அதன்பேரில் வெங்கடகிருஷ்ணனின் 2 சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில், உடலுறுப்பு தானம் செய்த வெங்கடகிருஷ்ணனின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலா் சதீஸ்குமாா், அம்பத்தூா் வட்டாட்சியா் மணவாளன் மற்றும் காவல் துறையினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT