ஆம்னி பேருந்துகள்  கோப்புப் படம்
சென்னை

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல தடை

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்

DIN

சென்னை: ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக புகாா் வந்தது. இதனால், பொங்கல் பண்டிகைக்கும் அதேபோன்று கோயம்பேடு - மதுரவாயல் சாலையின் இருபுறத்திலும், போரூா் சுங்கச்சாவடி அருகிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிா்த்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

இதற்கான தனிக்குழு விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகாா்வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT