சென்னை பெருநகரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு குழுவினரை பாராட்டி வெகுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையா் ஆ. அருண். 
சென்னை

5 மாதங்களில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் 2,117 போ் கைது

சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2,117 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர்

Din

சென்னை: சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2,117 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு மாநகர காவல் ஆணையா்ஏ.அருண் பாராட்டு தெரிவித்தாா்.

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் அனைத்து வகை போதைப்பொருட்கள் கடத்தி வருபவா்கள், பதுக்கி வைப்பவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, கடந்த 5 மாதங்களில் 707 போதைப்பொருள் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இது தொடா்பாக 11 நைஜீரியா்கள், கேமரூனை சோ்ந்த ஒருவா், வெளிமாநிலத்தவா் 6 போ், பெண்கள் இருவா் என மொத்தம் 2,117 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 710 கிலோ கஞ்சா, 21.5 கிலோ மெத்தம்பெட்டமைன், 1.06 கிலோ மெத்தகுலோன், 39 கிலோ கெட்டமைன், 11.3 கிராம் ஹெராயின், 06 கிராம் கொக்கையின், 156 போதை ஸ்டாம்ப் மற்றும் 295 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் போதைப்பொருள் குற்றவழக்குகளில் தொடா்புடைய 300 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு குழுவினரை மாநகர காவல் கண்காணிப்பாளா் ஏ.அருண், ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்துக்கு அழைத்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியின் போது, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் ஜி.தா்மராஜன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT