முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில்கள் ஜன.14 முதல் 17 வரை சனி, ஞாயிறு நேர அட்டவணைப்படி இயக்கப்படும்

மெட்ரோ ரயில்கள் ஜன.14,15,16,17 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு நேர அட்டவணைப்படி இயக்கப்படும்

Updated On : 13 ஜனவரி, 2025 at 10:27 PM
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: மெட்ரோ ரயில்கள் ஜன.14,15,16,17 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு நேர அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்தி:

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்கிழமை(ஜன.14), புதன்கிழமை(ஜன.15) மற்றும் வியாழக்கிழமை(ஜன.16) ஆகிய நாள்களில் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை படியும், வெள்ளிக்கிழமை(ஜன.17) சனிக்கிழமை நேர அட்டவணை படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இதன்படி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப்படி, காலை 5 முதல் இரவு 11வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 முதல் நண்பகல் 12 வரை மற்றும் இரவு 8 முதல் 10 வரை 10 நிமிஷ இடைவெளியிலும், நண்பகல் 12 முதல் இரவு 8 வரை 7 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ

ரயில்கள் இயக்கப்படும்.

இதுபோல வெள்ளி(ஜன.17) அன்று சனிக்கிழமை அட்டவணை படி, காலை 5 முதல் இரவு 11வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 முதல் 11 வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 8 வரை 6 நிமிஷ இடைவெளியிலும், காலை 5 முதல் 8 வரை, காலை 11 முதல் மாலை 5 வரை மற்றும் இரவு 8 முதல் 10 வரை 7 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →