ENS
தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை நாள்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

பொங்கல் விடுமுறை நாள்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்...

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விடுமுறை நாள்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் விடுமுறை நாள்களிலும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி ஜன. 15, 16, 17 தேதிகளில் மெட்ரோ ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

அதன்படி மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து இயங்கும்.

அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro trains will operate as Sunday schedule during Pongal holidays

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு! அமைச்சர் அன்பில் மகேஸ்

ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குத் தேர்வான பராசக்தி!

பஞ்சாப் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!

டிரம்ப், நெதன்யாகுவுக்கு சவப்பெட்டி... ஈரானுக்கு ஆதரவாக லடாக்கில் போராட்டம்!

SCROLL FOR NEXT