கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு
கேரள மாநிலம், கொச்சி மெட்ரோ ரயிலின் தூணில் சிக்கிய பூனை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சி மெட்ரோ ரயிலின் தூணில் சிக்கிய பூனை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் கூறுகையில், கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கம் மெட்ரோ நிலையம் அருகே ஒரு தூணில் பூனை இருப்பதை அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கவனித்தனர். உடனே பூனையை மீட்க வியாழக்கிழமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, பூனையை மீட்க விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் சனிக்கிழமை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், பூனை கர்டரில் உள்ள இடைவெளிகளுக்குள் நகர்ந்து சென்றது. மேலும் ஹைட்ராலிக் கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் செயல்பாட்டை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஊழியர்கள் மாலையில் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் 15 நிமிடங்களுக்கும் மேலாக மின் இணைப்பை துண்டித்து பூனையை மீட்க ஒத்துழைப்பு அளித்தனர். இருந்தபோதிலும், பூனையைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. பூனை, உயிர்வாழ தூணின் மேல் அதிகாரிகள் உணவை விட்டுச் சென்றனர். அதற்குள், விலங்கு ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியைத் தொடருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர், சனிக்கிழமை இரவு கொச்சி மெட்ரோ நிர்வாகத்தின் தினசரி நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, நள்ளிரவில் பூனையைக் கண்டுபிடித்து மீட்க மீண்டும் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மீட்புப் பெட்டி மற்றும் வலைகளுடன் கூடிய இரண்டு பணியாளர்கள் தூணின் உச்சியை அடைந்து, பூனையைக் கண்டு அதை மீட்டனர். பூனை கீழே இறக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் கூடியிருந்தவர்கள் அதிகாரிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். மீட்கப்பட்ட பூனை விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது என்று தெரிவித்தனர். காந்தி நகர் நிலையத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், மெட்ரோ தூணில் சிக்கிய பிறகு பூனை மீட்கப்படுவது இது மூன்றாவது முறை என்று கூறினார். இதனிடையே தமிழ்நாட்டின் குணா குகைகளில் படமாக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான 'மஞ்ஞுமல் பாய்ஸ்' கதாபாத்திரத்தின் நினைவாக பூனைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் "சுபாஷ்" என்று பெயரிட்டனர்.
The rescue was abandoned by 5.15pm. It is expected to resume after 11.30pm, once all metro service operations are wrapped up for the day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.