FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

கத்திப்பாரா மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது பற்றி...

Updated On : 29 ஜூலை 2026, 4:18 pm IST
கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு - X
பகிர்:

சென்னை கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் ஜோசப் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கடந்த ஒரு மாத காலமாக துறை வாரியாக அதிகாரிகளை சந்தித்து, அந்தந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வை மேற்கொள்ள சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனர் வரை மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம் மேற்கொண்டார்.

நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் விஜய், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா மேம்பாலப் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை பார்வையிட்டார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மைல்கல்லாக விளங்கும் 101 அடி மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் முதல்வர் விஜய், ஆளில்லா மெட்ரோ ரயில் மூலம் பூந்தமல்லி வரை சென்று, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிடுகிறார்.

இந்த ஆய்வின்போது, நந்தனம், கிண்டி பகுதிகளில் கூடியிருந்த மக்கள் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜய்யும் கையசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

summary

Chief Minister Vijay inspects the 101-foot-high Metro bridge at Kathipara!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments