FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!

பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படுவது தொடர்பாக...

11 செப்டம்பர் 2026, 2:54 pm IST
பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள். - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளின் போக்குவரத்திற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குகின்றன. ஆனால், பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே ரயில்கள் இயக்கப்படுகிறது.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளுக்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 6 மணிக்குத் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை சேவைகள் முன்னதாகவே தொடங்கப்படுவது, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தடையின்றியும் சரியான நேரத்திலும் பயணம் செய்வதை உறுதிசெய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சிமாநாட்டின் போது நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதால், மாணவர்கள் மற்றும் பிற பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

summary

To facilitate the smooth and timely movement of students appearing for examinations and the general public amid traffic restrictions due to the BRICS Summit, Metro train services will commence at 6 am on all lines on Sunday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments