கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் நாளை(செப். 4) மாற்றம் செய்யப்பட்டு, சனிக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (செப். 4), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
Advertisement
Advertisement
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail administration has announced that, in view of Krishna Jayanthi, Chennai Metro services will be modified tomorrow (Sept. 4) and operated according to the Saturday schedule.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.