FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!

கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 3:48 am IST
மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் செங்கல்பட்டு வரை மற்றும் அஜிஸ் நகா் முதல் விம்கோ நகா் வரை என இரு இடங்களின் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளியை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியுள்ளது.

கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் பிரிவால் கோரப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கெனவே உள்ள முதல்கட்ட வழித்தடத்தின் நீட்டிப்பாக கிளாம்பாக்கம் மெட்ரோவில் இருந்து செங்கல்பட்டு வரை 27 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல, அஜிஸ் நகா் முதல் விம்கோ நகா் வரை 11 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.88 லட்சம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கைக்கான ஒப்பந்த ஆவணத்தை வரும் ஆக. 3-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து, அதை நிறைவு செய்து வரும் செப். 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Tender for Kilambakkam-Chengalpattu Metro project report!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments