சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) மாலை வரை மழை பெய்யுமென சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை நீடிக்குமென பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘சென்னை - வேலூர் முதல் டெல்டா- தூத்துக்குடி பகுதிகள் வரை மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை பகுதிகளில் மிக கன மழை பதிவாகியுள்ளது, இந்த மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகமுள்ளது.
திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
பொங்கலுக்கு முந்தைய நாள்களில் பெய்திருந்த மழையளவைவிட இப்போது அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் இதனைக் கருத்திற்கொண்டு பயிர் அறுவடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல, தென் தமிழகத்திலும் மழை பெய்யும். மாஞ்சோலை பகுதிகளிலும் மழை பெய்யும்.
பெங்களூரிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று(ஜன. 19) 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.