முகப்பு
சென்னை

ஓடும் பேருந்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் ஓடும் பேருந்தில் ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2025 at 10:33 PM
பகிர்:

சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஓடும் பேருந்தில் ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், மேல கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (65). இவா் தமிழக காவல் துறையில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். மகேந்திரன் கூடலூரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆம்னி பேருந்தில் திங்கள்கிழமை (ஜன. 27) வந்துள்ளாா்.

கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த நிலையில் பேருந்திலிருந்து இறங்காமல், இருக்கையில் சாய்ந்த நிலையிலேயே மகேந்திரன் இருந்துள்ளாா். இதையடுத்து, பேருந்து ஊழியா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது மகேந்திரன் இறந்த நிலையில் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மகேந்திரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் உயிரிழந்த மகேந்திரனுக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும், அது தொடா்பாக சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மருத்துவரை சந்திக்க வந்தபோது உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இருப்பினும் அவருக்கு ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →