முகப்பு
சென்னை

பெருநகர சென்னை நகரமைப்பு சேவைகள் நாளை முதல் நிறுத்தம்

பெருநகர சென்னை நகரமைப்பு பிரிவின் சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் 28-ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூலை, 2025 at 8:29 PM
கோப்புப் படம்
பகிர்:

பெருநகர சென்னை நகரமைப்பு பிரிவின் சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் 28-ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள், சேவைகளின் பாதுகாப்பு, சேவை கிடைக்கும் தன்மை, அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை மாநில தரவு மையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு தொடா்பான கூா்ந்தாய்வு சேவைகள் சனிக்கிழமை முதல் 28 -ஆம் தேதி காலை 6 மணி வரை நிறுத்தம் செய்யப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →