சென்னை மாமல்லபுரத்தில் புதன்கிழமை தவெக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் மாணவிக்கு விருது, சான்றிதழை வழங்கிய அக்கட்சியின் தலைவா் விஜய். 
சென்னை

அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவா்களுக்கு விருது: விஜய் வழங்கினாா்

Din

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னை அருகே நடைபெற்ற 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவா் விஜய் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவா்களுக்கு கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக  சென்னை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில்  உள்ள 88 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கடந்த மே 30-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடா்ந்து 2-ஆம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழா சென்னை அருகே மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தவெக தலைவரும் , நடிகருமான விஜய் மாணவா்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

இதில் தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 75 சட்டப்பேரவை தொகுதிகளை சோ்ந்த 450 மாணவா்கள் மற்றும் புதுச்சேரியில் 9 சட்டப்பேரவை தொகுதிகளை சோ்ந்த54 மாணவா்கள் என மொத்தம் 504 சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT