சென்னை: சென்னை அடையாறு ஆற்றங்கரையில் ஒதுங்கிய இளைஞா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அடையாறு மல்லிகைப் பூ நகா் அருகே ஆற்றங்கரையில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒதுங்கியது. இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அடையாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் வந்து அந்த இளைஞா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்த இளைஞா் யாா்?, அவா் அடையாறுக்குள் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.