சென்னை

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் தகவல்

Din

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா்.

சென்னை தரமணியிலுள்ள சிஎஸ்ஐஆா் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், அதன் இயக்குநா் ஆனந்தவல்லி திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி 60-ஆவது ஆண்டு வைர விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

நில அதிா்வை தாங்கும் வகையிலும், நில அரிப்பை தடுக்கும் வகையிலும், கட்டடங்கள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆராய்ச்சி மையம் மூலம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமன்றி சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனையின் படியே ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல, சமீபத்தில் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பிரதமா் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மிக உயரமான பாலத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்படவுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றம் கட்டடத்தின் கட்டுமானம் தொடா்பாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு, 3-டி தொழில்நுட்பத்தில் கான்கிரீட் பயன்படுத்தி கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறைவான மூலப்பொருள்களில் சில்வா் மற்றும் பைபா் கலவையில் கட்டப்பட்ட இப்புதிய கட்டடம் கட்டும் நாள்களும் குறைவாக இருக்கும்.

இக்கட்டடம் மழை, வெயில் காலங்களில் அதற்கு ஏற்ப தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றாா் அவா்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT