சென்னை

திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை பாசஞ்சர் ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து!

4 ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் உள்பட 4 ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை மண்டலப் பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:

  • காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்குப் புறப்படும் காட்பாடி - திருப்பதி மெமு பாசஞ்சர் (67210)

  • திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி - காட்பாடி மெமு பாசஞ்சர் (67209)

  • சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு பாசஞ்சர் (66033) ஆகிய 3 ரயில்களும் திங்கள்கிழமை(ஜுன் 16), புதன்கிழமை(ஜுன் 18) ஆகிய 2 நாள்கள் ரத்து செய்யப்படுகின்றன.

  • திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் மெமு பாசஞ்சர் (66034) செவ்வாய்க்கிழமை(ஜூன் 17), வியாழக்கிழமை(ஜூன் 19) ஆகிய 2 நாள்கள் ரத்து செய்யப்படுகின்றது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT