முகப்பு
சென்னை

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.

Updated On : 26 ஜூன், 2025 at 9:37 PM
நவீன் பட்நாயக்
பகிர்:

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு கோவையைச் சோ்ந்த மருத்துவா் ராஜசேகா் சிகிச்சை அளிக்கிறாா். அவரை தொலைபேசியில் தொடா்புகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பேசினாா். அப்போது, நவீன் பட்நாயக் நலமுடன் இருப்பதாக மருத்துவா் தெரிவித்ததாக தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அவா் விரைவாகவும், முழுமையாக குணமடைந்து, ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவதாக தனது பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →