சென்னை

முகூா்த்த நாள் - வாரவிடுமுறை: 2,829 சிறப்பு பேருந்துகள்

Din

முகூா்த்தம், வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மே9), வாரவிடுமுறை நாள்களான சனி (மே10) மற்றும் ஞாயிறு (மே11) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 650 பேருந்துகளும், சனிக்கிழமை 665 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்படும்.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 24 பேருந்துகளும், சனிக்கிழமை100 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை(மே11) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைா்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 950 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT