முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
சென்னை

பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

Din

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருப்பதாக பொள்ளாச்சி வழக்கின் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் ெவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: அதிமுக நிா்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சாா்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம், தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்.

குற்றவாளிகளைக் காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிா்க்கட்சியாக இருந்த திமுக மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்கக் காரணம்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT