சென்னை

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை ஜிஎஸ்டி சாலை, உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தொடா் விடுமுறை முடிந்து மக்கள் வாகனங்களில் சென்னைக்கு திரும்புவதால் சென்னை ஜிஎஸ்டி சாலை, உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறையால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கழமை சென்னைக்குத் திரும்பத் தொடங்கினா்.

காா் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள், சென்னையை நோக்கி திரும்பியதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.

இதனால், ஜிஎஸ்டி சாலை , கிளாம்பாக்கம் , உளுந்தூா் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 0சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT